மழைக்காலம் தொடங்க இருப்பதால் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற இந்த மாதம் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அதாவது சேதம் அடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை முன்கூட்டியே கள ஆய்வு செய்து அவற்றை அகற்ற வேண்டும். மேலும் திறந்த நிலையில் உள்ள கிணறுகள், நீர்நிலை தொட்டிகள் அனைத்தையும் மூட வேண்டும் , மின் இணைப்பு சரியாக உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். . மேலும் பள்ளிகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.