தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இன்று மட்டும் காலை முதல் கனமழை பெய்து வரும் 13 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து பல இடங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அதனை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்து வருகின்றது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 30 இடங்களில் மழை அளவை கண்காணிக்கும் விதமாக சென்சார் கருவிகள், ஆறு, ஏரிகள் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அளவை கண்காணிக்கும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.