Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை…… “தயார் நிலையில் இருக்கும் முன்னேற்பாடு பணிகள்…. ஆட்சியர் தகவல்…..!!!!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசியதாவது, “காவல், தீயணைப்பு, பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட பிரிவினர்களை ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரிடர் காலத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றது. அந்த இடங்களில் போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வெள்ளம், புயல், மழை போன்ற பாதிப்பில் இருந்து பொதுமக்களை காப்பாற்றி அவர்களை தங்க வைக்க பள்ளிக்கூடங்கள், சமுதாய கூடங்கள், புயல் பாதுகாப்பு மைய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகுகள், உயிர் காக்கும் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் மருத்துவ உதவிகள் செய்திடவும் போதுமான மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை தொடர்பாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க சிறப்பு எண்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |