வடகிழக்கு பருவமழை வலு பெற்றுள்ளதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வடகிழக்கு பருவமழை வலு பெற்றுள்ளதால் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதியில் இருந்து மீண்டும் பருவக் காற்று விச தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.