தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வருகிற 4-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று சாரல் மழை பெய்தது. பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Categories