Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை… முதல்வர் மு.க ஸ்டாலின் அக்.,24ஆம்  தேதி ஆலோசனை!!

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் அக்டோபர் 24ஆம்  தேதி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் வருகிற 26-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் அக்டோபர் 24ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.. தலைமைச் செயலகத்திலிருந்து காணொளியின் மூலம் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார்.. மழைநீர் வடிகால் சீரமைப்பு, நீர்நிலைகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

Categories

Tech |