தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் வடகிழக்கு பருவமழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் இறந்த நபர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக 25 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.