Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை…. முக்கிய ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!

கன மழையின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் ‌காரணமாக சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து கவுகாத்திக்கு இரவு 9:45 மணிக்கு செல்லும் கோவை-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மற்றும் ஜூலை 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் சில்சார் ரயில்வே நிலையத்திலிருந்து புறப்படாமல் கவுகாத்தியிலிருந்து ஜூலை 5-ம் தேதி மற்றும் ஜூலை 12-ஆம் தேதி புறப்படும். இதனையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் கவுகாத்தி வரை மட்டும் செல்லும். இந்த ரயில் ஜூலை 7 மற்றும் 14-ஆம் தேதி கவுகாத்தி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும். இந்த அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |