Categories
உலக செய்திகள்

“வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி”…? இன்று தொடங்கிய ராணுவ ஒத்திகை பயிற்சி..!!!!

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள்  கொரிய எல்லையில் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது.

மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு தினங்களாக ஏவுகணைகளை ஏவி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வடகொரியா அடுத்தடுத்து குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதனை அடுத்து இரண்டு வாரங்களில் வடகொரியா நடத்திய ஏழுக்கும் அதிகமான விமான சோதனைகளை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் திறனை அதிகரிக்க இந்த தென்கொரியாவின் வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |