வடகொரியாவின் தொலை தூர ஏவுகணை சோதனை குறித்து நாளை ஐ.நா. பாதுகாப்பு சபையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
வட கொரியா அண்மையில் நடத்திய நீண்ட தூர ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் நாளை அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வடகொரியா ஏவுகணை அமெரிக்காவின் ஒரு பகுதியை தாக்கும் திறன் கொண்டது என்பதனால் ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நீண்ட தூரம் பாய்ந்து துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா செய்துள்ளது . இதற்கு ஐ.நா.வின் பொது செயலாளர் அன்டோனியா குத்ரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும் ஐநாவின் பாதுகாப்பு விதிகளை மீறிய செயல் இது என அவர் வடகொரியாவை எச்சரித்துள்ளார் .