Categories
உலக செய்திகள்

“வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து சகிக்க முடியாது” … தென்கொரியா அதிபர் பேச்சு…!!!!

வடகொரியா முன்னெப்போதும்  இல்லாத விதமாக தென்கொரிய பகுதிகளில் ஏவுகணை சோதனையை நடத்தி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் அதி நவீன ஏவுகணையான கண்டம் விட்டு கண்ட பாயும் ஏவுகணை உட்பட பல்வேறு ஏவுகணை ஏவி சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில் “வடகொரியா இன்று குறைந்தபட்சம் ஒரு குறிப்பிடப்படாத பாலிஸ்டிக்  ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா  ராணுவம் கூறியுள்ளது”.

மேலும் தென்கொரிய தீபகற்பத்தில் ராணுவ பதட்டங்கள் இந்த வருடம் கடுமையாக அதிகரித்துள்ளது. இது குறித்து தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் கூறியதாவது, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து சகித்துக் கொள்ள முடியாது. மேலும் இதுபோன்ற செயல்கள் எப்போதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வடகொரியா உணர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |