வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவில் ஒற்றுமை இல்லை. எனவே அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் தன் மீது விரோதங்களை கொண்டுள்ளது என்று வடகொரியா கூறுகிறது. இதை இரண்டு நாடுகளும் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வடகொரியா வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வடகொரியா பீரங்கிகளை இயக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி தனது பாதுகாப்புத்திறனை வலுப்படுத்துவதற்காக என்று வடகொரியா கூறுகிறது. அதனைத் தொடர்ந்து தன் மீதான விரோத கொள்கையை அமெரிக்காவும் தென்கொரியாவும் கைவிட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த பயிற்சியின் போது அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பயிற…