வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் தென்கொரியா படைகளுடன் சேர்ந்து வருடம் தோறும் கொரிய எல்லை பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டு போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பையும் தாண்டி கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி தொடங்கி இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியான ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் வடகொரியா நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை தென்கொரியா எல்லையில் நோக்கி வீசி உள்ளது. வானிலிருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் இந்த ஏவுகணைகள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை நோக்கி வீசப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று வடகொரியா விசிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசுபிக் கடலில் விழுந்து உள்ளது இதனால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. இதனை அடுத்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஜப்பான் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் தங்கள் எல்லைக்குள் வடகொரியா ஏவுகணை வீசியதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.