Categories
உலக செய்திகள்

வடக்கு அயர்லாந்தில் பயங்கர வன்முறை.. காவல்துறையினர் மீது தாக்குதல்.. வருத்தத்தில் பிரதமர்…!!

பிரிட்டனில் வடக்கு அயர்லாந்தில் கலவரம் அதிகரித்து வருவதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனில் வடக்கு அயர்லாந்து பகுதியில் இருக்கும் Belfast என்ற நகரத்தில் கலவரம் அதிகரித்திருக்கிறது. இந்த கலவரத்தின் ஆதரவாளர்கள் வடக்கு அயர்லாந்து காவல்துறையினர்  மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மேலும் இதில் பத்திரிக்கையாளர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் தனியார் பேருந்து ஒன்றை கடத்தி அதிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்திருக்கிறார்கள். இணையதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

அவர் ட்விட்டரில், “வடக்கு அயர்லாந்தில் நடக்கும் கலவரக்காட்சிகள் என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. வேற்றுமைகளை பேசினால் தான் தீர்வு கிடைக்கும் அதற்காக கலவரம் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஒருபோதும் தீர்வு தராது” என்று பதிவிட்டுள்ளார். அதாவது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக வடக்கு மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கும்(Uk) இடையே பிரிட்டிஷ் சார்பு தொழிற்சங்க சமூகத்தில் புதிய வர்த்தக தடைகளில் பலருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் இந்த கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட இந்த கலவரமானது தற்போது மிகவும் அதிகரித்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |