Categories
மாநில செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகள்… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி உத்தரவு…!!!!!

வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைந்து முடிக்க மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாவது திட்டத்திற்கான பணிகளை சனிக்கிழமை அவர் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் 800 மெகா வாட் திறனுடைய இந்த திட்டத்திற்கான தற்போது பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குளிர்ந்த நீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் நிலக்கரி கொண்டு செல்லும் பகுதிகள் போன்றவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அதன்பின் மின் உற்பத்தியை மின் தொகுப்பில் இணைத்து பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல தேவையான மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் விரைந்து முடிவடையும் என ஆய்வின்போது, அதிகாரிகள் கூறியதாக அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து நிதியாண்டிற்குள் பணிகளை முடித்து மின்ன உற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மின்வாரிய இயக்குனர்கள் எம் ராமச்சந்திரன், த ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |