வடசென்னை திரைப்படத்தில் முதலில் அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தாராம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “வடசென்னை”. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இப்படமானது கேங்ஸ்டர் படமாக வெளியானது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தை விட அமீரின் கதாபாத்திரம் நின்று பேசிய நிலையில் இந்த படத்தில் முதலில் அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாம்.
இதுப்பற்றி அமீர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிந்ததாம். இந்த படத்தில் அமீர் கொஞ்ச நேரம் நடித்திருந்தாலும் வில்லனாக நின்று மிரட்டி இருந்தார். மேலும் இவர் ஆண்ட்ரியாவுடன் காதலில் அழகாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தால் இந்த அளவிற்கு படம் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.