Categories
மாநில செய்திகள்

வடசென்னை மக்களே… உங்களுக்காக ஒரு குட் நியூஸ்…!!!

சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தகட்ட சேவையாக ஜனவரி மாதம் முதல் புதிய சேவை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதை அடுத்து, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தகட்ட சேவையாக வண்ணாரப்பேட்டை மற்றும் விம்கோ நகர் தடத்தில் ஜனவரி மாதம் முதல் சேவை தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கிலோ மீட்டர் நீள தடத்தில் 8 ரயில் நிலையங்கள் அமையும். மின்சார கேபிள்கள், சிக்னல் கருவிகள் அமைக்கும் பணிகள் இம்மாத இறுதியில் முடிவடையும் நிலையில், சோதனை ஓட்டம் நடந்த பிறகு சேவை தொடங்கும் என்று தெரிகிறது. இந்த சேவை பொதுமக்களுக்கு மிகவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |