இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் பலனாக டெல்லி, குஜராத், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்து பாதுகாப்பான சூழலில் உள்ளதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.