இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரகாண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக உணரப்பட்ட பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தானில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அனைத்தும் சற்று நடுக்கம் கண்டன. அதனால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வீதியில் தஞ்சமடைந்தனர். அதனால் வடமேற்கு மாநிலங்களில் சற்று பதற்றம் நிலவி வருகிறது.