உள்ளூர் காவல் துறையிடம் தெரிவிக்காமல் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் பெங்களூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது.
சேலம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த சரக்கு கடை வைத்துள்ளார் நேற்றிரவு 9 மணி அளவில் ரோட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை காரில் ஏற்றிச் சென்றனர். அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த ஆயுதப்படை உறுதியளித்த தகவலின்பேரில் அந்த காரை கருப்பூர் போலீசார் மடக்கினர் விசாரணையில் அவர்கள் போலீசார் என்றும் அங்கு திருடு போன இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பான்பராக், குட்கா, புகையிலை பொருட்களை வாங்கியது சம்பந்தமாக கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை கருப்பூர் போலீசார் விசாரிப்பதற்கு அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.