வடமாநில இளைஞர் சென்னையில் தனியார் விடுதியில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பெரியமேடு பகுதியில் தனியார் விடுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வருண் திவாரி(29) என்ற இளைஞர் தங்கி தோல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வேலைக்கு சென்று முடித்துவிட்டு விடுதிக்கு வந்து தங்கிவிடுவார். இந்நிலையில் நேற்று(பிப்21) விடுமுறை என்பதால் அவர் தனது அறையிலேயே தங்கி வெளியே செல்லாமல் இருந்தார். அவர் அறைக்குள்ளே வெகுநேரமாக இருந்ததாக தெரியபடுகிறது.
இந்நிலையில் வருண் திவாரியில் தாயார் நேற்று இரவு வழக்கம் போல அவரிடம் பேச நினைத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்காத நிலையில் விடுதியின் உரிமையாளரை அவரது தாயார் தொடர்பு கொண்டுள்ளார். இதனை அடுத்து விடுதியின் உரிமையாளர் ஜாபர் அலி வருண் திவாரி அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாக அவர் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதியின் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து அங்கு வந்த பெரியமேடு காவல் துறையினர் உள்ள சென்று பார்க்கையில் வருண் திவாரி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் அங்கே இருந்த அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.