நம்மில் நிறைய பேர் சாதம் வடித்த பின் அந்த கஞ்சியை வேண்டாத பொருளாக நினைத்து வெளியில் கொட்டி விடுவோம் அதில் அதிக பலன் தரும் சத்துக்கள் உள்ளன.
ஒரு தம்ளர் அரிசி கஞ்சியில் சிறிதளவு மோர் கலந்து குடித்து வருவதால் உடல் குளிர்ச்சி அடையும் மேலும் உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கும். அரிசி கஞ்சியுடன் சிறிதளவு புதினா சீரகத்தூள் கலந்து குடிப்பதால் ஜீரண சக்தி பெறுகிறது. கஞ்சியில் அதிக வைட்டமின்கள் தாதுக்கள் கார்போஹைட்ரேட் இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் உடல் வளர்ச்சியில் முன்னேற்றம் அதிகரிக்கும். பசியை தூண்டுவதற்கு பழச்சாறுகள் அருந்துவதற்கு பதிலாக அரிசி கஞ்சி பருகலாம் ஏனென்றால் இதுவும் பசியைத் தூண்டுவதோடு உதவுகிறது. இதனுடன் சீரகம் சேர்த்து பருகுவது மிக மிக நன்று. இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது இந்த அரிசியை சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
அரிசிக் கஞ்சியின் மருத்துவ பயன்கள்:
1. அரிசி கஞ்சியுடன் திராட்சை பழங்களை அரைத்து முகத்தில் தடவி வருவதால் முகம் பளிச்சென்று மாறும்.
2. சொறி சிரங்கு உள்ள இடங்களில் பருத்தி துணியை இந்த கஞ்சியில் நணைத்து கட்ட புண்ணில் ஏற்பட்ட வலி குறையும். தீ காயம் ஏற்பட்டாலும் அரிசிக்கஞ்சி பயன்படுத்தி குறைக்கலாம்
3. வெளியில் செல்வதற்கு முன்பு அரிசிக்கஞ்சி கொஞ்சம் உடம்பில் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விட்டு பிறகு வெளியில் செல்லும்பொழுது புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
4. தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி சருமம் மிருதுவாகவும் நமது உடலில் நெற்றி கழுத்து கை முகம் போன்ற இடங்களில் வடித்த கஞ்சியை தடவி வருவதன் மூலம் இளமைத் தோற்றத்தையும் பெறலாம்.
5. வேர்க்குரு பிரச்சினைகளுக்கும் அரிசிக்கஞ்சி மூலம் தீர்வு காண முடியும். கால் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த அரிசி கஞ்சியுடன் வெந்நீர் மற்றும் கல் உப்பு கலந்து கால்கள் மூல்கும் அளவுக்கு முக்கி வைக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்யும் பொது கால்வலி குறையும்.