வடிவேல் காமெடி ஒன்றில் கிணற்றை காணவில்லை என்பதை போல சுவிட்சர்லாந்தில் அதிகாரிகள் நீரை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கின்றனர்.
திரைப்படம் ஒன்றில் காமெடியின் போது வடிவேல் காவல்துறை அதிகாரிகளிடம் கிணற்றை காணும் என்று புகார் அளிப்பார். அதுபோல் நீரை காணும் என்று அதிகாரிகள் தேடிக் கொண்டு இருக்கின்றனர். ஸ்விட்சர்லாந்து Bernese கிராமத்திலிருந்து Laupeeswil நகராட்சிக்கு 35 மில்லியன் லிட்டர் நீரை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
ஆனால் நகராட்சிக்கு 21 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே சென்றடைந்துள்ளது. மீதி 14 மில்லியன் லிட்டர் நீரை காணவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கிடையே நாம் அனுப்பிவைத்த நீர் எங்கே போனது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் 14 மில்லியன் லிட்டர் நீர் காணாமல் போனதால் குழாய்களில் ஏதேனும் உடைப்பு இருக்கிறதா என்றும், வழியில் யாராவது நீரை கொண்டு சென்று விட்டார்களா என்ற அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.