Categories
அரசியல்

வடிவேலுவின் பஞ்சாயத்தை…. தீர்த்து வைத்தது நான் தான்…. முதல்வர் அல்ல…!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் சிம்பு தேவனோடு ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது.  இதனால் அவரால் எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்த நிலையில் வடிவேலின் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது. இதனையடுத்து தமிழக முதல்வரின் தலையீட்டால் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளதாக வடிவேல் கூறியுள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வடிவேலுவின் பஞ்சாயத்தை வைத்தது முதல்வர் மு.க ஸ்டாலின் கிடையாது, நான் தான் தீர்த்து வைத்தேன். வடிவேலுவின் இடத்தை நிரப்ப யாருமில்லை. இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வடிவேலு இல்லாமல் மீம்ஸ் உலகமே இல்லை. அது பற்றி தான் நாம் தினமும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |