Categories
மாநில செய்திகள்

வடிவேலு பாணியில் மளிகை கடையில் ஆட்டையை போட்ட நபர்….!! ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு…!!

காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் அரிசி வாங்குவது போல நடித்து தராசு, படிக்கற்கள் போன்றவற்றை ஆட்டையை போட்டு விட்டு சென்று விடுவார். அதுபோல ஒரு சுவாரசியமான சம்பவம் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் கணேசன் என்பவர் மளிகை கடையில் நடத்தி வருகிறார்.

அவரது மளிகை கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் தனக்கு அரிசி மூட்டை வேண்டும் என கேட்டுள்ளார். அரிசி முட்டையை எடுப்பதற்காக கணேசன் கடையில் உள்ள வேறு ஒரு அறைக்கு சென்றபோது அங்கு வந்த வாலிபர் கடையில் வைக்கப்பட்டிருந்த 22 ஆயிரம் ரூபாயை எடுத்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விட்டாராம். அறையிலிருந்து வெளியே வந்த கணேசன் அரிசி வாங்க வந்த நபர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 22,000 ரூபாயை திருடி விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து கணேசன் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Categories

Tech |