தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியை தனிக்கட்சி தொடங்கி பாருங்கள் என்று சவால் விட்டிருப்பது அவருடைய ஏமாற்றத்தின் வெளிப்பாடு. எடப்பாடி தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இருக்கும்போதுதான் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடத்தி அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நடத்துவது தான் பொதுக்குழு. ஓபிஎஸ் கூட்டிய கூட்டம் டுபாக்கூர் கூட்டம்.வடிவேலு நானும் ரவுடி தான், ரவுடி தான் என கூறும் காமெடி போல, நானும் அதிமுக தான் என ஓபிஎஸ் கூறி வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்பு இபிஎஸ் தான் அதிமுக. சின்னமும், கட்சியும் இபிஎஸ் வசம் தான் உள்ளது என்றார்.