Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வடையெல்லாம் சுடலை தம்பிகளா…. நிஜம்.”… பீஸ்ட் படம் பற்றி ட்விட் செய்த பிரபல தயாரிப்பாளர்…!!!!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று முன்தினம் இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

மேலும் நேற்று வெளியாகிய கேஜிஎப் 2 திரைப்படத்தால் பீஸ்ட் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான தனஞ்ஜெயன் பீஸ்ட் படம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, பீஸ்ட் படத்திற்கு தமிழ்நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே முதல் நாள் வசூலை பீஸ்ட் படம் முறியடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் “வடையெல்லாம் சுடலை தம்பிகளா. நிஜம்” என குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |