திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து அதனை மீட்பதற்கு வட்டாட்சியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்து அறநிலையத்துறை அமைச்சராக அமைச்சர் சேகர்பாபு நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோவில் நிலங்களை ஆக்கிரமித்த அவர்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்துதல், கோவில் நகைகளை உருக்கி அதனை வங்கிகளில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கோவில்களை சரியாக நிர்வாகம் செய்தல் போன்ற பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து மீட்டு இந்து அறநிலையத் துறையில் வருவாயை அதிகப்படுத்துவதற்கு, வட்டாட்சியர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் தற்போதைய மதிப்பு 1628.1 கோடி ஆகும் என்று கூறியுள்ளார்.