Categories
மாநில செய்திகள்

வட்டார போக்குவரத்து அலுவலக அமைக்கப்படுமா?….. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பதில்….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

அதனை தொடர்ந்து விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படுமா? என்று உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார். அதற்கு விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக அமைக்கப்பட்ட சாத்தியக்கூறு இல்லை என்று அமைச்சர் ராஜ்கண்ணப்பன் பதிலளித்துள்ளார்.

Categories

Tech |