தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக திருப்பூர் மாநகராட்சியின் 36வது வார்டில் மணி என்பவர் போட்டியிட்டார். இவர் இந்த தேர்தல் செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது வெறும் 44 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டையும் இழந்துவிட்டதால் மணி அதிர்ச்சியடைந்தார்.
இதன் காரணமாக மனமுடைந்த மணி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தேர்தல் செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 வாக்குகள் மட்டுமே பெற்று மணி தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.