Categories
மாநில செய்திகள்

வட்டிக்கு வட்டி வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – உயர்நீதி மன்றத்தில் விசாரணை

ஊரடங்கு காலத்தில் வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கான சலுகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் வருமானம் பாதிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாதங்களுக்கு கடன் தவணையைகளை செலுத்த விளக்கமளித்து அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஆனால் இந்த வங்கி கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி விதித்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி அளித்து வந்தனர். ஏற்கனவே கடனை செலுத்த முடியாமல் பொதுமக்கள் திணறும் நிலையில் வட்டிக்கு மேலும் வட்டி வசூலிபதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த வாரம் அரசு தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் பொது மக்களின் பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என நீதிமன்றம் விமர்சித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெறவிருந்த நிலையில் இன்று விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Categories

Tech |