இந்திய மக்கள் மத்தியில் வெளிநாட்டு பணிகள் மீதான மோகம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் கனவை நனவாக்க விரும்புவோருக்கு 0 சதவீதம் வட்டிக்கு ஒரு கிராமம் கடன் வழங்குகிறது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்திலுள்ள டொலாரியா கிராமத்தில், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று யாராவது விரும்பினால், ஊர் மக்களே ஒன்றுசேர்ந்து பணத்தை திரட்டி கடன் வழங்கி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த கடனுக்கு வட்டி கிடையாது என்பது அதிசயமான ஒன்றாகும். ஆனால் வெளிநாட்டுக்கு செல்லும் நபர்களோ அங்கிருந்து நன்றி மறக்காமல் 2 மடங்காக பணத்தை அனுப்புவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். சில பேர் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு அதையும் இருமடங்காக திருப்பிச் செலுத்தி இருப்பதாக டொலாரியா ஊர்வாசிகள் கூறுகின்றனர். இதனிடையில் வட்டியே இல்லா கடன் என்பதையும் விட, இஎம்ஐ தவணையும் இந்த கடன்களுக்கு வசூலிக்கப்படுவதில்லை. வட்டிச் சுமை, இஎம்ஐ சுமை இல்லாததால் வெளியில் கடன் கிடைக்காதவர்கள் டொலாரியா ஊரில் கடன் பெற்று தங்களது வெளிநாட்டு கனவுகளை நனவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.