திண்டுக்கல் மாவட்ட சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளா மாநிலத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இந்நிலையில் ஓமந்தூரான் தனது மனைவி பாண்டியரின் பெயரில் ஒரு சொத்தை விற்று பணம் தருமாறு அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் அவர்களுக்கு ஏற்பட்ட தகராறி கிரிக்கெட் மட்டையால் அடித்து ஓமந்தூரான் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது 16 வயது மகனை கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஓமந்தூரானின் மனைவி பாண்டீஸ்வரி(37), தாசரிப்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரியின் சித்தி கிருஷ்ணவேணி(35), மதுரை சேர்ந்த பாண்டீஸ்வரியின் மாமா ராமையா(62), அத்தை லட்சுமி(50) ஆகிய 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.