ஈரோட்டில் பண தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் கண்ணதாசன் வீதியில் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜீவா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அவர்கள் தற்போது ஈரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து, சுப்பிரமணியம் என்பவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களில் சிலர் பணத்தை திரும்ப கொடுக்காததால் ஜீவா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனால் மனமுடைந்த ஜீவா நேற்று முன்தினம் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஜீவாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.