Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதத்தை திடீரென உயர்த்திய எஸ்.பி.ஐ வங்கி….. வாடிக்கையாளர்கள் ஷாக்…..!!!!

நாட்டின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த மாதம் எஸ்பிஐ,எம் சி எல் ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது.வட்டி விகித உயர்வாள் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்க கூடும்.

அதனைப் போலவே எஸ்பிஐ கடந்த வாரம் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருந்தது.அதன்படி ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு பொது மக்களுக்கு 2.90 முதல் 5.65 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.45 சதவீதமாகவும் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |