பேங்குகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறக்கூடிய கடன்களுக்கு விதிக்கப்படுவது தான் ரெப்போ வட்டி. அண்மையில் ரெப்போவட்டி விகிதம் 5.90 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வங்கி செலுத்தவேண்டிய வட்டி அதிகரிக்கப்படுவதால், பொது மக்கள் வாங்கிய கடன்களுக்குரிய வட்டியை வங்கிகள் உயர்த்துகிறது. இதன் காரணமாக வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் ஆகியவற்றின் வட்டியும், மாததவணையும் அதிகமாக்கப்படுகிறது. அத்துடன் தங்களது பேங்கில் வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்குரிய வட்டியும் அதிகரித்து வழங்கப்படும்.
அந்த அடிப்படையில் கனராவங்கி தன் நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்கு மாற்றப்பட்ட வட்டி விகிதத்தை அறிவித்து உள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்ட வட்டி அக்டோபர் 7ஆம் தேதி முதல் அமலாகி இருக்கிறது. அந்த வகையில் 5 – 10 வருடம் வரையிலான திட்டத்துக்கு 7 சதவீத வட்டியும், 3 -5 வருடம் வரையிலான திட்டத்திற்கு 6.50 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்று 2 – 3 வருடம் வரையில் 6.50 சதவீத வட்டியும், 666 நாட்கள் கொண்ட திட்டத்தில் 7 சதவீத வட்டியும், 1 – 2 வருடம் வரை 6.50 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த நாட்களாகவுள்ள 7 -45 நாள் வரையினாலான திட்டத்துக்கு 3.25 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட வட்டிவிகிதத்தை கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.