Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் குறைக்கப்படுமா…? ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது….? வெளியான தகவல்…!!!

ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ரிசர்வ் வங்கியில் கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிடும். அதற்கு ஏற்ப வங்கி டெபாசிட் மற்றும் கடன் போன்றவற்றுக்கான வட்டி மாறுபடும். ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட குழு முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த முடிவு ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும்.

இந்த நிலையில் இந்த முறை ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவ வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்காக மாநில அரசுகளும் இதற்கேற்ற வகையில் தயாராகி வருகின்றனர். இது போக சில்லரை பணவீக்கம் வலுவடைந்துள்ளது. இதற்கு மத்தியில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்பட்டால் தற்போதைய நிலை தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |