Categories
மாநில செய்திகள்

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும் …!!

வட இந்தியாவில் இந்த ஆண்டு குளிர்காலம் மோசமானதாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த சமயத்தில்   திடீரென குறையும் வெப்பநிலை காரணமாக ஆண்டுதோறும் பல முதியவர்கள் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலம் எவ்வாறு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட இந்தியாவில் இரவு வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும். பகலில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வடக்கு, வடமேற்கு மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் சில துணை பிரதேசங்களில் வெப்பநிலையானது குறைந்தபட்ச அளவை விட குறைவாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |