வட கொரியாவில் கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதனால் அந்நாட்டில் ஊரடங்கு பொதுமுடகத்தை அந்நாட்டின் பிரதமர் கிம் ஜாங் அறிவித்தார். ஆனால் கொரோனா தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளோ வந்திராத அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வலுவாக இல்லை. இதனால் அங்கு தினந்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. மேலும் தகவல்களை மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவின் தலைவர் டாக்டர் மைக் ரேயன் கூறியது, கொரோனா பாதிப்பு குறித்த கூடுதல் தகவல்களை வட கொரிய அதிகாரிகள் வழங்க வேண்டும்.
அங்கு இருந்து தரவுகளைப் பெறுவதில் எங்களுக்கு உண்மையிலேயே சிக்கல் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் எங்களிடம் போதுமானதாக இல்லாத போது நாங்கள் உலகத்துக்கு சரியான பகுப்பாய்வு தர முடியாது. வடகொரியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளையும் தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றின் வினியோகங்களை தர உலக சுகாதார அமைப்பு பலமுறை முன்வந்துள்ளது. வெளிப்படையான அணுகுமுறை வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறோம். அப்போதுதான் நாங்கள் வடகொரிய மக்களுக்கு உதவிகளை செய்ய முடியும். ஏனென்றால் இப்போது எங்களால் அங்குள்ள நிலைமைகளை இடர் மதிப்பீடு செய்யக்கூடிய நிலையில் இல்லை. வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு அண்டை நாடுகளான சீனா, தென்கொரியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.