வட கொரியாவில் அனைத்துமே தவறாக தான் நடக்கிறது என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் வடகொரியாவிலும் 4 நல்ல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது வட கொரியா நாட்டில் சிறிய குற்றம் செய்தால் கூட அதற்கு தூக்கு தண்டனைதான் வழங்குவார்கள். இதனால் மக்கள் குற்ற செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுவதே கிடையாது. இதனையடுத்து நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுக்கும். இதன் காரணமாக வடகொரியாவில் அனைத்து மக்களுக்கும் சொந்தமாக வீடு இருக்கும். அதன்பிறகு கல்வி மற்றும் மருத்துவமும் வடகொரியாவில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதனையடுத்து வட கொரிய மக்கள் அனைவரும் தங்களுடைய கலாச்சாரத்தை இன்றளவும் பின்பற்றுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் வெஸ்டர்ன் கல்ச்சர்தான் அதிக அளவில் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் முதற்கொண்டு மக்கள் வெஸ்டன் ஆடைகளை அணிகின்றனர். ஆனால் வட கொரியாவில் வாழும் மக்கள் தங்களுடைய பாரம்பரிய உடைகளை தான் அணிவார்கள். இவர்கள் தங்களுடைய கலாச்சாரம் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். மேலும் வட கொரியாவில் அரசாங்க பயன்பாட்டிற்கு மட்டுமே கார்களை பயன்படுத்த வேண்டும். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் கார் ஓட்டுவது கிடையாது. இதனால் வட கொரியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதற்கு அதிக அளவில் வாய்ப்பு கிடையாது.