சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து தமிழில் அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த சொமேட்டோ நிறுவனம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டபோது, அந்த நிறுவனம் மொழி பிரச்சனையால் இப்படி நடந்ததாக கூறியுள்ளார்.. தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைத்திருக்காக வேண்டும் என்று கூற, இந்தியாவின் தேசிய மொழி இந்தி, அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.. இந்தி மொழி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சோமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது..
இதையடுத்து அந்த உரையாடலை ஸ்கிரீன் சாட் எடுத்து விகாஷ் இணையத்தில் பதிவிட அந்தச் செய்திகள் வைரலாகி வருகிறது.. #Reject_zomato ஹேஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பரப்பப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது..
திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.. மேலும் #Hindi_Theriyathu_Poda என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்..
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சொமேட்டோ ட்விட்டரில், வணக்கம் விகாஷ், எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு முகவரின் நடத்தைக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். இந்த சம்பவம் குறித்த எங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ. அடுத்த முறை உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு தருவீர்கள் என்று நம்புகிறோம் தயவு செய்து சொமேட்டோவை நிராகரிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது..
சொமேட்டோ வெளியிட்ட அறிக்கையில், வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம் மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.
இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத் தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம். (எடுத்துக்காட்டு. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்), மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.
உணவு மற்றும் வழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்து உள்ளோம் அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது..
Vanakkam Vikash, we apologise for our customer care agent's behaviour. Here's our official statement on this incident. We hope you give us a chance to serve you better next time.
Pls don't #Reject_Zomato ♥️ https://t.co/P350GN7zUl pic.twitter.com/4Pv3Uvv32u
— zomato (@zomato) October 19, 2021