Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான் திரைப்படம் குறித்து தகவல் வெளியிட்ட முக்கிய நடிகர்”…. குஷியில் சூர்யா ரசிகாஸ்….!!!!!

வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என படத்தில் நடிக்கும் முக்கிய பிரபலம் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வரும் சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்‌. இதனையடுத்து பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகர் சூர்யா பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா வாடிவாசல் மற்றும் வணங்கான் போன்ற  திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் வணங்கான் திரைப்படத்தை பாலா இயக்குகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில் சில பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடிக்கும் ஹூகான் ஹுசைனி வணங்கான் திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடவில்லை. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். இத்திரைப்படத்தில் நான் முக்கிய வேடத்தில் நடிக்கின்றேன். தற்போது அக் கதாப்பாத்திரத்திற்காக என்னை தயார் செய்து வருகின்றேன் எனக் கூறியுள்ளார். இதை தொடர்ந்து இத்திரைப்பட மீண்டும் தொடங்கும் என சூர்யா ரசிகர்களுக்கு இடையே நம்பிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |