Categories
மாநில செய்திகள்

வணிகப் புரிதலை எளிதாக்குவதற்கான தரவரிசை பட்டியல்…. தமிழகத்திற்கு 3-வது இடம்…. வெளியான அறிவிப்பு…!!!

வணிகம் புரிதலை எளிதாக்குவதற்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு துறை வணிகம் புரிதலை எளிதாக்குதல் தொடர்பாக ஆண்டுதோறும் மாநிலங்களை தரவரிசை படுத்துகிறது. இந்த தரவரிசை பட்டியல்  வணிக சூழலை உருவாக்குபவர்கள், சாதனை படைப்பதற்கு முயற்சி செய்பவர்கள், சாதனையாளர்கள் மற்றும் சிறந்த சாதனையாளர்கள் என்ற 4 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

இதில் 90% அதிகமான மதிப்பெண்களை எடுக்கும் மாநிலங்கள் சிறந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறும்.  இந்நிலையில் நடப்பாண்டிலும் தரவரிசை பட்டியல் தயார் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் 96.97% மதிப்பெண்களை பெற்று தமிழ்நாடு 3-வது இடத்தில் இருக்கிறது. இதனையடுத்து மத்திய அரசு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை அதிகப்படுத்துவது தொடர்பாக 301 சீர்திருத்தங்களை வெளியிட்டது.

இந்த சீர்திருத்தங்களை தமிழக அரசு முறையாக செய்துள்ளது. இதன் காரணமாக பயனீட்டாளர்களிடமிருந்து சிறந்த கருத்துக்களை பெற முடிந்ததால் தமிழகம் 3-வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு தமிழகம் 18-வது இடத்திலும், கடந்த 2019-ம் ஆண்டு தமிழகம் 19-வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |