Categories
மாநில செய்திகள்

வணிகர்களுக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு வழங்கிய சூப்பர் சான்ஸ்….!!!

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இல்லாமல் நிரந்தர உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் நல வாரியம் பொதுமக்கள் நலனுக்காக இந்தியாவில் 1989-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. வணிக நல வாரியத்தின் உறுப்பினர் களின் நலனுக்காக குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.3,05,73,000/- மதிப்பீட்டில் 8,873 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் பதிவு பெற்ற வணிகர்கள் மற்றும் பதிவு பெறாத வணிகர்கள் வருடத்திற்கு  ரூ.40,00,000 – வரையிலான வியாபாரம் செய்யும் வணிகர்கள், வாரியத்தின் பலனைப் பெறும் வகையில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணத் தொகையான ரூ.500-யை செலுத்துவதிலிருந்து 15.07.2021 முதல் மூன்று மாதங்களுக்கு விலக்களிக்கப்பட்டது.

இதன் பயனாக 15.07.2021 முதல் 14.10.2021 வரை 40.442  வணிகர்கள் தங்களை இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.  பல்வேறு வணிகர் சங்க பேரமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கான கட்டண தொகையை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் கால அவகாசத்தை வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |