வணிக வளாகத்தில் சாகசம் செய்த இளைஞரை ஒரு நபர் கீழே தள்ளிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
டிக் டாக், ஷேர் சாட் போன்ற வீடியோ தளம் மிகவும் பிரபலம் அடைந்திருப்பதால் ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மக்களை கவர்வதுடன் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் தொடங்கியுள்ளனர். வருமான ஆதாரம் இருப்பதினால் பலர் தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக சமூக ஊடங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஒருவரை பிராங் செய்வது முதல் வீட்டில் துணி துவைப்பது போன்ற அன்றாட வாழ்க்கையை கண்டன்டாக மாற்றி ட்ரெண்டிங்க் லிஸ்டில் பலர் இடம் பிடித்திருக்கின்றனர்.
அந்த வகையில் சாகசம் செய்து பலரை கவரும் இளைஞர்களின் வீடியோ இணையத்தில் கொட்டி கிடைக்கிறது. எல்லாராலும் செய்ய முடியாத அல்லது வித்தியாசமான முயற்சி செய்கின்றவர்கள் வீடியோவை மக்கள் பார்ப்பதனால் அப்படியான கண்டண்டுகளை உருவாக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அந்த வகையில் இளைஞர்கள் இரண்டு பேர் வணிக வளாகம் ஒன்றில் எஸ்கலேட்டரில் ஏறாமல் அதன் வெளியே நின்று ஏற முயற்சி செய்கின்றனர். ஆனால் அந்த வீடியோவை பார்க்கும் போதே அவர்களுக்கு இதில் நல்ல அனுபவம் இருப்பது போல் தெரிகின்றது.
இந்த நிலையில் வழக்கம்போல் அவர்கள் எஸ்கலேட்டரின் வெளிப்புறத்தில் மூவாகும் கையைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி முயற்சி செய்கின்றார். அப்போது அவர்களுக்கு முன்பாக எஸ்கலேட்டரில் இருந்த நபர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென வெளியில் இருந்து கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ஏரிய இளைஞரின் கையை கீழே தள்ளி விடுகின்றார் இந்த வீடியோ காண்பவரை அதிர்ச்சி அடைய செய்கிறது. மேலும் இந்த வீடியோ ட்விட்டரில் மட்டும் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.