இந்தோனேஷியா ஜாவா தீவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வான் உயரும் அளவிற்கு கரும்புகை வெளியேறி இருக்கிறது.
இந்தோனேஷியா சுரபயா நகரில் உள்ள வணிக வளாகத்தில் மேல் மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ மெல்ல மெல்ல வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின்படி 13 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து முக்கிய பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து தடைபட்டு நகரே முடங்கிவிட்டது.