வணிக வளாகத்தில் 3 மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் கொலம்பியா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் திடீரென 3 மர்ம நபர்கள் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது ” வணிக வளாகத்தில் திடீரென மூன்று மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 9 பேருக்கு நேரடியாக குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அங்கிருந்து தப்பிக்க முயன்ற பொதுமக்களில் சிலர் கூட்டநெரிசலில் சிக்கி படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தற்செயலானது இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயதுடைய ஜீவேனே எம் பிரைஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.