தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து ஜிகே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், விலங்குகளை பராமரிக்கும் குழுவினருக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டதா? தடுப்பூசிகள் போடப்பட்டதா? அவர்கள் மூலமாக சிங்கங்களுக்கு கொரோனா பரவி இருக்கலாமா? என்பது குறித்து விசாரணை தேவை. தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.