Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில்…. “2 அணில் குரங்குகள் திருட்டு”…. 4 பேர் அதிரடி கைது..!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 அணில் குரங்குகளை திருடியது தொடர்பாக  4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னைக்கு அருகில்  உள்ள  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் இருக்கின்றன.  அதே  போல   இரண்டு ஆண் அணில் குரங்குகளும் வளர்க்கப்பட்டு  வருகின்றன. இந்த அணில் தென்னாப்பிரிக்காவில் மட்டுமே  காணப்படும். கடந்த 2018ஆம்  ஆண்டு  இந்த இரண்டு  ஆண் அணில்  குரங்குகள் சென்னையில் பறிமுதல்  செய்யப்பட்டு  வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த அரிய வகை ஆண் குரங்குகள் பார்ப்பதற்கு முகம் மட்டும் குரங்கு தோற்றத்திலும் ,வால் முதல் கழுத்துவரை அணில் உடல் அமைப்பிலும் இருக்கும். இந்த அணில்  குரங்குக்கு  சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உண்டு.

இந்த அணில்கள் சாப்பிடுவதற்கு  திராட்சை, அன்னாசி, வெள்ளரிக்காய் மற்றும் கேரட் போன்ற உணவுப் பொருட்களை கொடுத்து பூங்காவின் ஊழியர்கள் பாதுகாத்து வந்தனர் .மேலும் பூங்காவில் அணில் குரங்குகளுக்கு இரும்பு வேலி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்  கடந்த 8ஆம் தேதி மர்ம நபர்கள் பூங்காவிற்குள் நுழைந்து அணில்கள் அடைத்து வைக்கப்பட்ட கூண்டில் இருந்த வேலியை வெட்டி அகற்றிவிட்டு அதிலிருந்த  குரங்குகளை திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து  பூங்காவின்  ஊழியர்கள்   உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர் .இந்த அணில் குரங்கு திருட்டு போனதை அடுத்து பூங்கா வனசரக அலுவலர் வாசு ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து பூங்காவிற்கு வந்த போலீசார் அந்த அரிய வகை அணில் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டை பார்வையிட்டனர். மேலும் அங்கு இருந்த பூங்கா ஊழியர் இடமும்  அதிகாரிகளிடமும்  நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.பின் சிசிடிவி  காட்சிகளை  ஆய்வு  செய்தனர். இதுகுறித்து விசாரணை  செய்த போலீசார் இரண்டு  அரிய  வகை  அணில்களை  திருடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து   தீவிரமாக  தேடி வந்தனர். மர்ம நபர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருப்பதால் துறைமுகம் மற்றும்  விமான நிலையம்   போன்ற  இடங்களில் கண்காணித்து வந்தனர்.

இந்த அணில்கள் திருடுபோனதன் எதிரொலியாக வண்டலூர் பூங்காவின்  நிர்வாகம் சார்பில்  பூங்காவின்  நுழைவுவாயில், வாகன நிறுத்துமிடம் உட்பட 3 இடங்களில் அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டுள்ளது. அதில்,  பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் பூங்காவில் இருந்து மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்றும், பூங்காவில் இருந்து வெளியேறவேயில்லை  என்றால்  ரூ.100  அபராதம் என்றும் அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அணில் குரங்கு  திருடு போனது  குறித்து பூங்காவின் தரப்பிலும்  விசாரணை  நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி காணாமல் போன குரங்குகளை  திருடி சென்றவர்களை போலீசார் தேடி வந்த  நிலையில், பூங்காவின்  ஒப்பந்த ஊழியர் சத்தியவேல்  மற்றும் அவரது நண்பர் ஜானகிராமனுடன்  கூட்டாக சேர்ந்து கம்பிகளை அறுத்து எடுத்து அணில் குரங்குகளை  திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த குரங்கு லோகநாதன்  என்பவர்  மூலம்  வினோத்  என்பவரிடம் 4 லட்ச ரூபாய்க்கு  விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.  அணில் குரங்குகளை மீட்ட தனிப்படையினர் 4 பேரை கைது செய்தனர்.

.

Categories

Tech |