Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு….. நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக மூடப்பட்ட ஏழு பார்வையாளர்கள் காணும் இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் பாம்புகள் இருப்பிடம், ஊர்வன இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை முதல் கட்டமாகத் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றான சிறுவர் பூங்கா வார நாட்களில் மட்டும் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவிற்கு அனுமதி இல்லை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |